தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நவம்பரில் பள்ளிகள் திறப்பு... ஏற்பாடுகள் மும்முரம்... - school reopen in tamilnadu

தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை தொடங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

school reopen
school reopen

By

Published : Oct 8, 2021, 3:29 PM IST

சென்னை:நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துவரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் செப்.1ஆம் தேதி முதல்கட்டமாக, 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இதையடுத்து நவம்பர் 1ஆம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் முதன்மை கல்வி அலுவர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு ஒன்றை இட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் 19 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்துள்ளநிலையில், மீண்டும் திறக்கப்படஉள்ளன.

எனவே, தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தங்களது பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை அறிதல், வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்தல், பழுது பார்ப்பு பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை உடனடியாக தொடங்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிகளை சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:பள்ளிகள் திறப்பு.. தமிழ்நாடு அரசு உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details