தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு எடுக்கக் கூடாது; தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி ஆகிய பண்டிகைகளை அடுத்து வரும் இரண்டு நாள்களினைச் சேர்த்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

School
School Education

By

Published : Apr 15, 2022, 3:36 PM IST

சென்னை:தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் வரும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

அதில், தமிழ்நாட்டில் '2021-22ஆம் கல்வி ஆண்டில் 14.04.2022 வியாழக்கிழமையன்று தமிழ்ப்புத்தாண்டு மற்றும் 15.04.2022 வெள்ளிக்கிழமையன்று புனித வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் தொடர் அரசு விடுமுறை நாட்கள் என்பதால், 16.4.2022 சனிக்கிழமை அன்று அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது. விடுமுறை முடிவுபெற்று 18.04.2022 அன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும்' என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடும் என்பதால், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இன்று (ஏப்.15) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பள்ளிகளுக்கு தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளி என்று 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக எழுந்த புகாரையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை - காரணம் இதுதானாம்!

ABOUT THE AUTHOR

...view details