சென்னை : தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் திருமணம் செய்யவும், புதிய பைக், கார் வாங்கவும் கடன் உதவி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடன்! - கடன் உதவி
ஆசிரியர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
![ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடன்! School Education dept announcement on Jewel loan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12392999-thumbnail-3x2-dpi.gif)
School Education dept announcement on Jewel loan
இந்தத் திட்டம் பழைய வாகனங்களை வாங்குவதற்கு பொருந்தாது. கடன் உதவி திட்டத்தை ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : எல். முருகனுக்கு வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்