தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி: 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த பள்ளிக் கல்வித்துறை - செஸ் விளையாட்டு போட்டி

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவதை முன்னிட்டு செஸ் விளையாட்டு போட்டி குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளை நடத்தவும் 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது..

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி

By

Published : Jun 24, 2022, 12:30 PM IST

மாணவர்களிடையே சதுரங்க போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. அதை முன்னிட்டு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் செஸ் போட்டி குறித்த புத்தாக்க பயிற்சி 1ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளி அளவிலும்,வட்டார அளவிலும் ,மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் 9 முதல் 12ம் வகுப்பு வரை 38 மாவட்டங்களிலிருந்து 152 மாணவர்,152 மாணவியர் என 304 மாணவ மாணவியர் சர்வதேச போட்டிகளை பார்வையிட வாய்ப்பு உள்ளது. 6ஆம் முதல் 8ஆம் வரை மாணவ மாணவியர் 152 பேர் சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாட வாய்ப்பாக அமையும். இப்பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:13,331 ஆசிரியர் பணியிடங்களை காலி தொகுப்பூதியத்தில் ஓராண்டிற்கு நிரப்ப உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details