தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு காரணமாக அனைத்து தனியார் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பள்ளி பேருந்துகள், வேன்கள் இயக்கப்படாமல் உள்ளன.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து பள்ளிப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, பொதுச்செயலாளர் நந்தகுமார், “பள்ளிகள் திறக்கப்படாத நாள்களில் இயக்கப்படாமல் உள்ள பள்ளிப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாகவும், தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்துவதாகும்,