தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசுப் பள்ளிகளுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள்: அறிக்கை அளிக்க உத்தரவு - school education

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த பரிந்துரை அறிக்கையை, ஜனவரி 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

dpi
dpi

By

Published : Dec 11, 2019, 6:31 PM IST

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ”தமிழ்நாடு முழுவதும் 300 மாணவர்களுக்கு குறையாமல் படிக்கக்கூடிய அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தேவைப்படும் மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதி, கூடுதலாகத் தேவைப்படும் வகுப்பறை வசதிகள், பள்ளிகளுக்கான சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த விரிவான பரிந்துரை அறிக்கையை தயார் செய்து, ஜனவரி 31ஆம் தேதிக்குள் இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

இப்படி பெறப்படும் திட்டங்கள், நபார்டு வங்கி நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்படும். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் தரம் உயர்த்தப்பட்ட பள்ளியின் பெயரை பரிந்துரை செய்யக்கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details