பாரத ஸ்டேட் வங்கியின் 8,653 காலிப் பணியிடங்களுக்கான எழுத்தர் தேர்வு ஜூன் மாதம் 22, 23, 30ஆம் தேதிகளில் நடைபெற்றது. நிலைத்தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறும். முதற்கட்டமாக நிலைத்தேர்விற்கான முடிவுகள் நேற்று இரவு வங்கியின் இணையதளத்தில் வெளியாகியுள்ளன.
இந்தத் தேர்வு முடிவுகளில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய, உயர் வகுப்பினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டுள்ளது. ஒருவர் நிலைத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் கட்ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே, மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்.
இந்தக் கட்ஆஃப் மதிப்பெண்களே தற்போது விமர்சனத்திற்குள்ளாகி-வருகிறது. அதாவது, பொதுப்பிரிவினர், எஸ்.சி., ஓ.பி.சி. பிரிவினருக்கு கட்ஆஃப் மதிப்பெண் 61.25 ஆகவும், எஸ்.டி. பிரிவினருக்கு 53.75 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேர்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.