சென்னை: மின்சார துறை தலைமை அலுவலகத்தில் அலுவலர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (மார்ச் 28) ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மின் வாரிய துறையில் வட்டி குறைப்பு காரணாமக ரூ.2,200 கோடி அளவிற்கு சேமிப்பு உருவாகியிருக்கிறது. ஒரு லட்சம் விவசாயிகளுக்கான மின் இணைப்பு திட்டம் ஒரு மாதத்திற்குள் நிறைவடைய உள்ளது. கோடைக்காலத்தில் கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
20,114 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி அதிகரித்து இருக்கிறோம். ஒரு நாளைக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை இருக்கிறது. 50 ஆயிரம் டன் நிலக்கரி தான் மத்திய அரசிடம் இருந்து வந்து கொண்டிருக்கிறது.
தேவையான அளவு நிலக்கரி மத்திய அரசு கொடுக்க வேண்டும். 2006 இல் வட சென்னையில் தொடங்கப்பட்ட மின் உற்பத்தி திட்டம் 2019 ஆம் ஆண்டு நிறைவு பெற்று இருக்க வேண்டும். ஆனால் அதிமுக அரசு அதனை செய்யவில்லை.