தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு கிடையாது: தலைமைத் தேர்தல் அலுவலர் - தேர்தல் ஆணையம்

சென்னை: பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படாது என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் கூறியுள்ளார்.

சத்யபிரதா சாஹூ

By

Published : Apr 30, 2019, 9:53 AM IST

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தருமபுரியில் எட்டு வாக்குச்சாவடிகளிலும், கடலூர், திருவள்ளூரில் தலா ஒரு வாக்குசாவடியிலும் பிரச்னை ஏற்பட்டதாக அன்றே புகார் அளிக்கப்பட்டது. இதனால், அந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், பொன்பரப்பிய்ல் அதுபோன்ற புகார்கள் வரவில்லை. அங்கு வன்முறை நடந்ததாகக் கூறப்படும் நாளோ, இல்லை அடுத்த நாளோ தேர்தல் கண்காணிப்பாளரிடம் புகார் எதுவும் தரப்படவில்லை” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details