சென்னை: ஹெச்.வினோத்தின் முதல் படமான சதுரங்க வேட்டை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்தது.
அதைத்தொடர்ந்து, அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா நடிப்பில் சதுரங்க வேட்டை 2ஆம் பாகம் தொடங்கப்பட்டது. இப்படத்தை நிர்மல் குமார் இயக்கியிருந்தார். ஹெச்.வினோத் கதை மற்றும் திரைக்கதை எழுதியிருந்தார். நிதிப் பிரச்னை காரணமாக நீண்ட நாட்களாக இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.