தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போயஸ் தோட்டத்தில் சசிகலா வழிபாடு - போயஸ் தோட்டம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போயஸ் தோட்டத்தில் உள்ள "ஜெய கணபதி" ஆலயத்தில் சசிகலா வழிபாடு நடத்தினார்.

sasikala at poes garden
sasikala at poes garden

By

Published : Sep 10, 2021, 10:55 PM IST

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் வெளியே உள்ள "ஜெய கணபதி" ஆலயத்தில் சசிகலா வழிபாடு நடத்தினார்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் எளிமையான முறையில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெய கணபதி கோயிலில் வி.கே.சசிகலா விநாயகரை மலர்தூவி வழிபட்டார். போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெய கணபதி ஆலயத்தில் விநாயகருக்கு தீப ஆராதனை நடத்தப்பட்டது.

போயஸ் தோட்ட விநாயகர் கோவிலில் வழிபட்ட சசிகலா

அப்போது சசிகலா விநாயகருக்கு மலர் தூவி வழிபட்டார். பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அருகே, சுமார் 90 ஆண்டுகள் பழமையான ஆலமர லிங்கத்தை வழிபட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் ஜெய விநாயகர் கோயிலுக்கு வந்து வழிபட்டார்.

ABOUT THE AUTHOR

...view details