சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அதன் பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ”கட்டாயத்தின் பேரில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. எங்களின் கொள்கை தீய சக்தியான திமுகவையும், துரோக சக்தியான அதிமுகவையும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்பது தான். சசிகலாவின் மானசீக ஆதரவு எங்களுக்கு உள்ளது.
சசிகலா ஆதரவு எங்களுக்குத்தான்! - டிடிவி.தினகரன் - அமமுக தேமுதிக கூட்டணி
சென்னை: தீய சக்தியான திமுகவையும், துரோக சக்தியான அதிமுகவையும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்பதே எங்களின் நோக்கம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
ammk dmdk
மக்களை ஏமாற்றும் வெற்று வாக்குறுதிகளை திமுகவும், அதிமுகவும் தேர்தல் அறிக்கையாக அளித்துள்ளது. அதிமுக வேண்டுமானால் வெற்றி நடை போடுவதாக கூறிக் கொள்ளலாம். ஆனால் மக்கள் காதில் பூ வைத்திருக்கவில்லை. ஆர்.கே.நகரில் நான் போட்டியிட்டதே திடீரென நிகழ்ந்த ஒன்றுதான். இருந்தும் நான் அங்கு வெற்றிபெறவில்லையா? அதனால் தொகுதி மாறி கோவில்பட்டியில் நிற்பது பயத்தின் காரணமாக அல்ல” என்றார்.
இதையும் படிங்க:'முதலமைச்சரின் தத்துப் பிள்ளை நான்' - கடம்பூர் ராஜு