சென்னை:சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு சசிகலா தான் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் தொடர்ந்து தமிழ்நாடு அரசியல் நிகழ்வுகளை வீட்டிலிருந்து உன்னிப்பாக கவனித்துவந்தார்.
இதுவரை சுமார் 50 ஆடியோக்கள் ரிலீஸ்
தேர்தல் முடியும் வரை அமைதி காத்த சசிகலா, தற்போது தொண்டர்களிடம் பேசிவருவதால் அரசியலில் ரீ- என்ட்ரி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக தொண்டர்களுடன் சசிகலா பேசிவரும் ஆடியோ உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிவருகின்றன. கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் இதுவரை வெளிவந்துள்ளன.
அதிமுகவின் தீர்மானம்
இதையடுத்து அதிமுக தலைமை உத்தரவின்பேரில் சசிகலாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் தீர்மானங்களை நிறைவேற்றிவருகின்றனர். மேலும் சசிகலாவுடன் செல்போனில் பேசிய பலரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.