சென்னை: சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு அரசியலைவிட்டு விலகுவதாக அறிவித்த சசிகலா, அதிமுகவின் தொண்டர்களைச் சந்திப்பேன் என்று தொடர்ந்து கூறிவருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே, அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொடர்ந்து பேசிவரும் ஆடியோ வெளியாகி வருகின்றன. இதுவரை 120க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் சசிகலா தரப்பில் இருந்து வெளியிடப்பட்டன.
அதில், தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் என அனைவரிடமும் கட்சியை, தான் மட்டுமே வழிநடத்திச் செல்ல முடியும். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்று கூறிவருகிறார்.
விரைவில் தொண்டர்களைச் சந்திப்பேன்
இந்த நிலையில், ஊரடங்கு முடிந்த உடன் தொண்டர்களை நிச்சயம் சந்திப்பேன் என்று புதிய ஆடியோவில் சசிகலா பேசியுள்ளார்.