தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜெயலலிதா முதலமைச்சராக எம்.எல்.ஏ. பதவியைத் துறந்த சசிகலா விசுவாசி! - காலமானார்

அமமுக பொருளாளரும் சசிகலா, தினகரனின் ஆதரவாளருமான வெற்றிவேல் இன்று மாலை சென்னையில் காலமானார்.

AMMK  Vetrivel
AMMK Vetrivel

By

Published : Oct 15, 2020, 10:16 PM IST

சென்னை :கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 6ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் பி.வெற்றிவேல் (59) சிகிச்சை பலனின்றி இன்று (அக்.15) மாலையில் காலமானார்.

அதிமுகவில் இணைவதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியர் வெற்றிவேல். கடந்த, 2011ம் ஆண்டு அதிமுக சார்பில் ஆர்.கே. நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014ம் ஆண்டில், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்தால் சிறை சென்ற ஜெயலலிதா, அவரது ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பதவியை இழந்தார்.

பின்னர் அதே ஆண்டு மே மாதம் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட, ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானார். அடுத்த 6 மாத காலத்திற்குள் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்க வேண்டும் என்ற விதிமுறைப்படி, ஜெயலலிதா போட்டியிடுவதற்காக, தனது ஆர்.கே., நகர் எம்எல்ஏ பதவியை வெற்றிவேல் ராஜினாமா செய்தார்.

பின்னர், 2016ம் ஆண்டு பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று மீண்டும் எம்எல்ஏ ஆனார். அதிமுகவில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் ஆதரவாளராக இருந்தார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, டிடிவி தினகரன் தலைமையிலான அணியில் சேர்ந்தார். கடைசி வரையில் அவரது நம்பிக்கைக்குரிய நபராகவே இருந்தார். அவருக்கு அமமுகவில் பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டது.

கடந்த 2017 ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி அரசிற்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில், பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்களில் இவரும் ஒருவர். 2019 ஆண்டு இடைத்தேர்தலில் அமமுக சார்பில் மீண்டும் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின்னர் அமமுகவில் தீவிரமாக கட்சி பணியாற்றினார்.

இந்த நிலையில் கடந்த 6ம் தேதி சளி காய்ச்சல் தொல்லை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி சுவாசிப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

வெற்றிவேல் ஆர்.கே. நகர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவர்.

இதையும் படிங்க:திமுகவின் போராட்டம் முட்டாள்தனமானது’ - அண்ணாமலை தாக்கு

ABOUT THE AUTHOR

...view details