வரும் சட்டப்பேரவை தேர்தலில் சசிகலா அதிரடி காட்டுவார் என அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் அவர் மார்ச் 3ஆம் தேதி சுக்கு நூறாக உடைத்து விட்டார். அன்றைய நாள், தான் அரசியலிலிருந்தே விலகுவதாக அறிக்கை விட்ட சசிகலாவால் பட்டி தொட்டியெங்கும் பரபரப்பானது.
சொந்த பந்தங்களை சந்திக்க சொந்த ஊருக்குச் செல்கிறார் சசிகலா - உறவினர்களை சந்திக்கிறார் சசிகலா
கிட்டத்தட்ட ஒரு மாத கால ஓய்விற்கு பின் திடீர் பயணமாக சசிகலா, இன்று தனது சொந்த ஊருக்குச் சென்று உறவினர்களை சந்திக்க உள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறையிலிருந்த சசிகலாவிற்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தொற்றிலிருந்து குணமடைந்த சசிகலா, தொடர்ந்து சிறையிலிருந்தும் விடுதலையானார். பிப்ரவரி 9ஆம் தேதி சென்னை வந்தடைந்த சசிகலா, திநகரில் உள்ள கிருஷ்ணபிரியா இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.
இந்நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாத கால ஓய்விற்கு பின் திடீர் பயணமாக சசிகலா இன்று தஞ்சாவூர் புறப்பட்டார். வெகுநாட்களுக்கு பின்பு சொந்த ஊர் செல்லும் அவர் அங்கு உறவினர்களை சந்தித்து பேசுகிறார்.