தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அதிமுக பொதுக்குழு செல்லாது' - சசிகலாவின் வழக்கு தள்ளிவைப்பு - சசிகலா தொடுத்த வழக்கு தள்ளிவைப்பு

அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தொடுத்த வழக்கின் விசாரணையை சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

Sasikala
Sasikala

By

Published : Jul 30, 2021, 5:05 PM IST

சென்னை:சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா நான்கு ஆண்டுகள் சிறைக்குச் சென்ற பிறகு, 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா, தினகரனை பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் பதவிகளிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால், இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தைச் செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

சசிகலாவின் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், அவைத்தலைவர் சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவுக்குப் பதிலளிக்க சசிகலா தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்தது.

சசிகலா தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், பிரதான வழக்கிலிருந்து தினகரன் விலகியதால், அவரது பெயரை நீக்கி திருத்த மனு தாக்கல்செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என அதிமுக தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட திருத்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது குறித்த விசாரணையை நீதிபதி, ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details