தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்: சரத்குமார் வேண்டுகோள் - Chennai political news

சென்னை: பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள்; நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றால் பண அரசியலை ஒழிக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ம.நீ.ம கட்சி தலைமை அலுவலகத்தில்
ம.நீ.ம கட்சி தலைமை அலுவலகத்தில்

By

Published : Feb 27, 2021, 2:41 PM IST

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ஐஜேகே கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ரவி ஆகியோர் ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசனை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர்.

கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், "ஐஜேகே, சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி உறுதியானது. இன்று (பிப் 27) கமல்ஹாசனிடம் கூட்டணி பற்றி பேசி இருக்கிறோம். அவர், நல்ல முடிவு சொல்வதாகக் கூறியுள்ளார்.
அதிமுகவில் காலம் கடந்தும் கூட்டணி குறித்து எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. எங்களுடைய வாக்கு விகிதம் குறித்து தெரிந்துகொள்ளவும், மக்களுக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
தேர்தல் வியூகத்திற்காக தான் 234 தொகுதியிலும் நிர்வாகிகளை நியமித்துள்ளோம். தமிழ்நாட்டு மக்களிடம் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள். நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றால் பண அரசியலை ஒழிக்க வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details