தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கன்னடத்தில் நாயகனாகும் நடிகர் சந்தானம்! - Santhanam is the hero in Kannada!

நடிகர் சந்தானம் தற்போது கன்னட படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் நாயகனாகும் சந்தானம்!
கன்னடத்தில் நாயகனாகும் சந்தானம்!

By

Published : Apr 18, 2022, 7:00 PM IST

நடிகர் சந்தானம் தமிழ்த்திரைத்துறையில் நகைச்சுவை வேடங்களில் நடித்துப் பிரபலமானார். அதன்பிறகு வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகம் ஆனார், நடிகர் சந்தானம்.

அதன் பிறகு வரிசையாகப் படங்கள் நடிக்கத் தொடங்கினார். தில்லுக்கு துட்டு, சக்கபோடு போடு ராஜா, சர்வர் சுந்தரம், டகால்டி, சபாபதி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா அதனைத்தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்துவருகிறார். தற்போது ஏஜெண்ட் கண்ணாயிரம், குளுகுளு ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் இவர் கன்னடப் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கன்னட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தைத் தமிழிலும் வெளியிட உள்ளனர்.

இதையும் படிங்க:பார்வையற்றோரும் பார்க்கும் வகையில் உருவாகியிருக்கும் 'மாயோன்’

ABOUT THE AUTHOR

...view details