தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 28, 2021, 3:47 PM IST

Updated : Oct 28, 2021, 4:55 PM IST

ETV Bharat / city

சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்து: மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க உத்தரவு

சங்கராபுரத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்கும்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

HRC
HRC

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்த செல்வகணபதி என்பவர், தீபாவளி பண்டிகையை ஒட்டி, மொத்தமாக பட்டாசுகளை வாங்கி தனக்கு சொந்தமான கடையின் பின்புறம் உள்ள குடோனில் வைத்திருந்தார்.

கடந்த 26ஆம் தேதி மாலை ஏற்பட்ட மின் கசிவு காரணமாக பட்டாசுகள் வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இந்தக் கோர விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன், இது குறித்து 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்திற்கு காரணம் என்ன?

Last Updated : Oct 28, 2021, 4:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details