தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் 3 ரயில் நிலையங்களில் சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள்

சென்னையில் உள்ள சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் பெண் பயணிகளின் வசதிக்காக, சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

tn_che_04_manirathnam_script_7205221
tn_che_04_manirathnam_script_7205221

By

Published : Sep 3, 2021, 10:06 PM IST

Updated : Sep 4, 2021, 7:22 AM IST

சென்னை: ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர், எம்ஜிஆர் சென்ட்ரல் மற்றும் தாம்பரம் ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் தானியங்கி சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

தென்னக ரயில்வேயின் பெண்கள் அமைப்பு மற்றும் ஜியோ இந்தியா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த இயந்திரங்களை வழங்கியுள்ளன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், சென்னை கோட்டத்தைச் சேர்ந்த தென்னக ரயில்வே பெண்கள் அமைப்புச் செயலாளர் கிருஷ்ணவேணி மற்றும் ரோட்டரி சங்கத்தின் முதல் லேடி புனிதா ஸ்ரீதர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நாப்கின் வழங்கும் இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தனர்.

ரூ.5-க்கு நாப்கின்

இந்த மூன்று அறைகளிலும் ரயில் நிலையங்களிலும் பெண்கள் கழிவறைக்கு அருகே சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் வைக்கப்படும் என்றும், இவற்றில் ஐந்து ரூபாய் செலுத்தினால் தேவைப்படுபவர்கள் பாதுகாப்பான வகையில் நாப்கினைப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சானிடரி நாப்கின் இயந்திரத்தை மக்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
பொது இடங்களில் இதுபோன்ற சானிட்டரி நாப்கின் இயந்திரங்களை நிறுவுவதன் மூலம் மாதவிடாய் காலத்தில் பெண்கள் சுகாதாரத்தை கடைப்பிடிக்க முடியும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் பெண்கள் மட்டும் பயணிக்கும் வகையில் ஜிபிஎஸ், சிசிடிவியுடன் கூடிய 'பிங்க் பஸ்'

Last Updated : Sep 4, 2021, 7:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details