தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கால சம்ஹாரமூர்த்தி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு - Anti Idol Smuggling Division Police

தஞ்சாவூரில் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட காலசம்ஹாரமூர்த்தி சிலை அமெரிக்காவில் உள்ள ஏல நிறுவனத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 22, 2022, 11:57 AM IST

சென்னை: தஞ்சை ஒரத்தநாடு அருகே காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான கால சம்ஹாரமூர்த்தி உலோக சிலை, 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் கடந்த 2020ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தொன்மையான உலோக சிலை திருடப்பட்டு போலியான சிலை வைக்கப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர்.

இந்த சிலை அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டி என்கிற ஏல நிறுவனத்தில் இருப்பதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். சிலையை மீட்பதற்கு உரிய ஆவணங்களை தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால், அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் இருக்கும் காலசம்ஹார மூர்த்தி சிலை, தமிழக கோவிலில் இருந்து திருடப்பட்டது தான் என்பதற்கான ஆவணங்களும், தற்போது வைத்துள்ள சிலை போலியானது என்பதற்கான ஆவணமும், சிலை திருடப்பட்டது தொடர்பாக இந்து அறநிலை துறை சார்பில் அளிக்கப்பட்ட புகார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் அடங்கிய கோப்புகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கிறிஸ்டி ஏல நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் குத்தாட்டம் போட்ட தொண்டர்கள் - கலாய்த்த செங்கோட்டையன்

ABOUT THE AUTHOR

...view details