இது தொடர்பாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், பொதுச்செயலாளருமான சரத்குமார் இன்று (பிப். 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமக கட்சியின் சட்டத்திட்டங்கள் மற்றும் விதிமுறைகள் அடிப்படையில், விதி எண் 14, பிரிவு 4இன் படி கட்சியின் 6ஆவது பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 3ஆம் தேதி நடைபெறுகிறது.
தூத்துக்குடி திரவியபுரத்தில் காலை 9.30 மணி முதல் நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பொதுக்குழு நிகழ்வுகளை சிறப்பித்துத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.