சென்னை: மேட்டூர் அணையைத் திறந்து வைப்பதற்காக, சேலத்துக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொது மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்திருந்தனர்.
அவற்றில் பொறியியல் பட்டதாரிப் பெண் ஒருவரின் மனுவில், தனது குடும்ப வறுமை நிலையை எடுத்துக் கூறி தனது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க உதவுமாறு கோரிக்கை வைத்திருந்தார். மனுவுடன் தன்னிடமிருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியையும், கரோனா நிதியாக அவர் வழங்கியிருந்தார்.
இதுகுறித்து முதலமைச்சரின் ட்விட்டர் பதிவில், "மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது.
பேரிடர் காலத்தில் கொடை உள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரிடத்தில் கொடுத்த மனுவில், " நான் கணினி பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். எனது தந்தை ஓய்வுபெற்ற ஆவின் ஊழியர். திருமணம் முடிந்த இரண்டு சகோதரிகள் உள்ளனர்.