சேலம்: அம்மாபேட்டை காவல் சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் இன்று (ஜூலை 31) காலை இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள குட்கா, போதைப்பொருள்கள் கடத்திச் சென்ற மூன்று லாரிகளை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
இதனையடுத்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் பிடிபட்ட லாரிகளையும், குட்கா பொருள்களையும் பார்வையிட்ட சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர், "சேலம் மாநகர்ப் பகுதியில் இன்னும் 15 முதல் ஒரு மாத காலத்திற்குள் குட்கா நடமாட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவோம்.
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
குட்கா, போதைப் பொருள்களை விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டம் மூலம் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதே நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும். இன்று இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா போதைப் பொருள்களைப் பறிமுதல்செய்துள்ளோம்.
செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா இந்த லாரி உரிமையாளர்கள், லாரியை ஓட்டிவந்தவர்களைத் தீவிரமாகத் தேடிவருகிறோம். அவர்களை விரைவில் பிடித்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்போம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரே நாளில் ரூ.1.50 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல் - போலீஸ் விசாரணை