தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’சலாம் சென்னை' குறும்படம் வெளியீடு! - சலாம் சென்னை

சென்னை: கரோனா காலகட்டத்தில் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 'சலாம் சென்னை' என்ற குறும்படம் வெளியிடப்பட்டது.

chennai
chennai

By

Published : Sep 19, 2020, 2:39 PM IST

வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கரோனா காலகட்டத்தில் மக்களைக் காக்கும் பணியில் உள்ள, முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ’சலாம் சென்னை’ என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், தமிழ் திரையுலக கலைஞர்கள் நடித்த இக்குறும்படத்தை, காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் ஜிப்ரான், நிறைய பாடல்களுக்கு தான் இசை அமைத்திருந்தாலும், மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இசையமைக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு பாடலில், தனக்கு பங்களித்த காவல் துறைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், ”2,400 காவல் துறையினர் நோய் தொற்றுக்கு உள்ளான போதும், கரோனா தடுப்புப் பணியில் காவல் துறையினர் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை கரோனா சூழல் காரணமாக காணமுடியாமல் போன சென்னை மக்களின் ஏமாற்றத்தைப் போக்கும் வகையில், இந்த விழிப்புணர்வு பாடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை இணைத்தோம்.

’சலாம் சென்னை' குறும்படம் வெளியீடு!

பொதுமக்கள் முகக்கவசம் அணிவதையும், கைகளை சுத்தம் செய்வதையும், இடைவெளியை கடைபிடிப்பதையும் செய்வதே இந்த நோயை நிரந்தரமாக ஒழிக்கும் வழி. மக்களின் ஒத்துழைப்புடனும், முன்களப் பணியாளர்களின் அற்பணிப்புடனும் கரோனாவை நிச்சயம் வெற்றி கொள்வோம் “ என்று கூறினார்.

நிகழ்ச்சியில், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்து நடவடிக்கை எடுத்த காவல் துறையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு சான்றிதழுடன் வெகுமதியும் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அலுவலர்கள், காவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ’ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ராமன்-லட்சுமணன் போன்றவர்கள்' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details