அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "சகாயம் ஐஏஎஸ், அரசுப்பணியில் இருக்கும்போது “லஞ்சம் தவிர்த்து...! நெஞ்சம் நிமிர்த்து...!!” என்கின்ற முழக்கத்தை தாம் பணியாற்றிய இடங்களில் எல்லாம் எழுதி வைத்து, ஊழலை ஒழிக்க அர்ப்பணிப்போடு பணியாற்றினார்.
அவரின் அளப்பறிய நேர்மையாலும் துணிச்சலான செயல்களாலும் ஈர்க்கப்பட்ட இளைஞர்களும் பொதுமக்களும் தமிழ்நாட்டின் சமூக அரசியல் மாற்றத்திற்காக அவரை தலைமையேற்க வேண்டி காத்துக்கிடக்கிறார்கள்.