தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ரஷ்யருக்கு 18 ஆண்டுகள் சிறை...! - போதைப்பொருள் கடத்தல் வழக்கு

போதைப்பொருள் கடத்திய வழக்கில் ரஷ்யாவைச் சேர்ந்தவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கு
போதைப்பொருள் கடத்தல் வழக்கு

By

Published : Jan 12, 2022, 10:43 PM IST

சென்னை:புதுச்சேரியில் வசித்த ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவர் 2011ஆம் ஆண்டு மூலிகை மருந்து எனக் கூறி போதைப்பொருள்களை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பிவந்ததை அறிந்த மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியட் புஷ்பா, போதைப்பொருள் கடத்தியதாக அலெக்சாண்டர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும் போதைப்பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட ஐந்து சட்டப் பிரிவுகளுக்குத் தனித்தனியாக 18 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இந்தத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தேர்தல் விதிகளை மீறிய கெஜ்ரிவால்... 24 மணி நேரம் கெடு! - ஆணையம் நோட்டீஸ்

ABOUT THE AUTHOR

...view details