சென்னை:தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதுவகை ஒமைக்ரான் தொற்று வெறும் ஒரு வாரத்தில் இங்கிலாந்து, ஹாங்காங், ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட 23 நாடுகளுக்கு பரவிவிட்டது. உலக நாடுகள் பீதியில் உள்ளன. இதனிடையே உலக சுகாதார அமைப்பு உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று, மற்ற வேரியண்டுகளைவிட மிக மிக ஆபத்து கொண்டது என்றும் வேகமாக பரவக்கூடியது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்காரணமாக, அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்த சூழலில் அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளை மூட அரசு உத்தவு பிறப்பித்துள்ளதாக செய்தி பரவி வருகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலால் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று வெளியாகும் பொய்யானது. புதுவகை தொற்றுக்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஒருவேளை விடுமுறை அளிக்கும் சூழல் ஏற்பட்டால் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிடும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சௌதி அரேபியா மூலம் வளைகுடா நாடுகளுக்குள் நுழைந்த ஒமைக்ரான்