தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அனைத்து கல்லூரி விடுதி மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை! - சென்னை ஐஐடி

சென்னை: அனைத்து கல்லூரி விடுதி மாணவர்களுக்கும் அடுத்த மூன்று நாட்களில் கரோனா பரிசோதனை செய்து முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

corona
corona

By

Published : Dec 16, 2020, 12:48 PM IST

சென்னையில் ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை முகாமையும், பல்கலைக்கழக விடுதியில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்தும், சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை இணை ஆணையர் திவ்யதர்ஷினி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திவ்யதர்ஷினி, ” சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பரிசோதனை மூன்று நாட்களில் நடத்தி முடிக்கப்படும்.

அனைத்து கல்லூரி விடுதி மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை!

ஐஐடி மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை முடிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்றும் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு நேற்றைய சோதனையில் 6 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் கிண்டி கிங்ஸ் கரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் “ என்றார்.

இதையும் படிங்க: ‘மாணவர்களை வர வேண்டுமென கட்டாயப்படுத்தவில்லை’ - கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர்

ABOUT THE AUTHOR

...view details