தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினராக நீதிபதி புஷ்பா சத்யநாராயணா தேர்வு - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயாணா தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புஷ்பா சத்யநாராயணா
புஷ்பா சத்யநாராயணா

By

Published : Mar 25, 2022, 6:54 AM IST

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2013ல் பதவியேற்றார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1960ம் ஆண்டு பிறந்த அவர், 1985ல் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து, வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். 28 ஆண்டுகள் வழக்கறிஞராக சிவில் (உரிமையியல்) வழக்குகளில் ஆஜராகி வந்தார். அவரது தந்தை ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 8 ஆண்டுகள் நீதிபதியாக இருந்த அவர் கடந்த பிப்ரவரி 27ம் தேதி ஓய்வு பெற்றார்.

தீர்ப்புகள் :

  • கல்வி நிறுவன பணியாளர்ளுக்கும் இ.எஸ்.இ சலுகை பொருந்தும் என்று தீர்ப்பு வழங்கிய மூன்று பெண் நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வுக்கு தலைமை வகித்தவர்.
  • தமிழ்நாடு சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
  • சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்கு எதிரான கருத்துக்களை நீக்கியது, நடிகர் சங்க தேர்தல் செல்லும் என தீர்ப்பளித்தது நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அளித்த தீர்ப்புகளில் குறிப்பிடத்தக்கது.
    நியமன உத்தரவு

இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணாவை தேசிய பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினராக நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், நீதிபதி புஷ்பா சத்யநாராயாணா, பசுமை தீர்ப்பாயத்தில் பதவியேற்கும் நாளிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை : தலைமைக் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்...!

ABOUT THE AUTHOR

...view details