மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறி அந்த மூன்று தொகுதிகளைத் தவிர்த்து எஞ்சிய 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம்.
நான்கு தொகுதி இடைத்தேர்தல்; தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு - sathyapradha sahu
சென்னை: திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு அளித்துள்ளது.
இதனையடுத்து, இதுதொடர்பாக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் உரிய நேரத்தில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. இதற்கிடையே சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் மரணமடைந்ததால் அந்த தொகுதியும் காலியானது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் மனு அளித்துள்ளார்.