தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துவருகிறார். அப்போது பேசிய தியாகராஜன், சென்னை பெருநகரில் வெள்ள தடுப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், இந்தாண்டு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு பட்ஜெட் 2022: சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிக்காக ரூ.500 கோடி
சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பணிக்களுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
rs-500-crore-for-flood-restoration-work-in-chennai
முன்னதாக தமிழ்நாடு அரசு, சென்னையில் மழைநீர் தேங்கும் 561 இடங்களை முதற்கட்டமாக கண்டறிந்து அங்கு மழைநீர் வடிகால்கள் அகலப்படுத்தப்படுவதுடன் ஆழப்படுத்தப்படும் என்று தெரிவித்தது. அதனடிப்படையில் பணிகள் தொடங்கப்பட்டன. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்திருந்தார். இந்த நிலையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:எதிர்க்கட்சி மீது பொய் வழக்கு போடக்கூடாது... அதிமுக வெளிநடப்பு...
Last Updated : Mar 18, 2022, 11:03 AM IST