தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டிராவல்ஸ் நிறுவனத்தில் ரூ.45 லட்சம் மோசடி: கணக்காளருக்கு வலைவீச்சு

சென்னை: தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் 45 லட்சம் ரூபாய் மோசடி செய்த கணக்காளர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

டிராவல்ஸ்
டிராவல்ஸ்

By

Published : Oct 3, 2020, 2:27 AM IST

சென்னை சேத்துப்பட்டு தனம்மாள் தெருவில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவருபவர் அனிதா ஜெயபிரகாஷ். இவரது டிராவல்ஸ் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றிவருபவர் அரும்பாக்கத்தைச் சேர்ந்த லிகி தியாகு.

இவர் கடந்த பத்தாண்டுகளாக கணக்காளராக தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறுவன வங்கிக் கணக்கிலிருந்து மோசடியாக கையொப்பமிட்டு தனக்குத் தெரிந்த பல்வேறு வங்கிக் கணக்கிற்கு சிறிய சிறிய தொகையை அனுப்பி மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பாக ஆண்டு கணக்கை சரிபார்த்தபோது 45 லட்சம் ரூபாய் கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டது.

நிறுவன கணக்காளர் மோசடி செய்தது உறுதிசெய்யப்பட்டதையடுத்து டிராவல்ஸ் உரிமையாளர் அனிதா ஜெயபிரகாஷ் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கணக்காளர் மீது புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள லிகி தியாகுவை தேடிவருகின்றனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details