அரபு அமீரகத்திலிருந்து இருந்து சென்னை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தப்படுவதாக சுங்க துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் அரபு அமீரகத்திலிருந்து இருந்து வரும் பயணிகளிடம் தீவிர சோதனை செய்தனர். அப்போது ஷார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமான பயணியின் உடமைகளில் கடத்தல் தங்கம் சிக்கியது.
சென்னையில் ரூ.34.93 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் - தமிழ்நாட்டில் கடத்தல் தங்கம்
சென்னை விமானநிலையத்தில் ரூ.34.93 லட்சம் மதிப்புள்ள 723 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை விமானநிலையத்தில் ரூ.34.93 லட்சம் மதிப்புள்ள 723 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
rs-34-lakh-worth-of-smuggled-gold-seized-in-chennai
அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியை கைது செய்தனர். முதல்கட்ட தகவலில், அரியலூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பதும் பறிமுதல் செய்யப்பட்ட 723 கிராம் கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.34.93 லட்சம் என்பதும் தெரியவந்துள்ளது. முன்னதாக சென்னை விமான நிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த பயணியிடம் இருந்து ரூ. 72 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்