தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: உடல் நலக்குறைவு மற்றும் விபத்தில் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியில் இருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

condolences
condolences

By

Published : Feb 13, 2021, 1:44 PM IST

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த அசோக்குமார், சேலம் இரும்பாலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த கனகராஜ், ஆயுதப்படையில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்த வரதராஜன், திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த பாலசுப்பிரமணியன், திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்த குணசேகரன், கோவில்பட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த தாமோதரன், சிவகாசி நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த மாரிக்கண்ணு, ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்த ஜக்கையா ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேலும், உடல் நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். துயர் துடைப்பு நிதியாக உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழக அரசின் ’1100’ சேவை இன்று முதல் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details