சென்னை:சென்னை பன்னாட்டு சரக்கக பிரிவில் இருந்து, ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த பார்சல் ஒன்று சந்தேகத்திற்கிடமாக காணப்பட்டது. இதனால், விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் பார்சலை ஆய்வு செய்தனர். பார்சலை பிரித்து பார்த்தபோது, துணிகள் மற்றும் புத்தகத்திற்கு இடையில் "மெத் கிரிஸ்டல்ஸ்" என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.2.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயன்றது கண்டுபிடிப்பு
சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயன்ற 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
drugs
இதையடுத்து, 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 920 கிராம் போதைப்பொருளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரித்தபோது, அனுப்பிய முகவரியும், செல்ல இருந்த முகவரியும் போலியானது எனத் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மாநகராட்சி கவுன்சிலர்கள் சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும் - அமைச்சர் கே.என்.நேரு