திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர்கள் ஆனந்த்- சாந்தி தம்பதி. இவர்கள் அப்பகுதி சுற்றுவட்டார மக்களிடம் கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளனர். நபர் ஒருவருக்கு மாதம் ரூ.200, ரூ.300, ரூ.500, ரூ.10,000 என 12 மாதங்கள் வரை வசூலித்து வந்துள்ளனர். தீபாவளி பண்டிகையின்போது தங்க நகை, பட்டாசு இனிப்பு வழங்குவதாக கூறி சுமார் 300 பேரிடம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
அவர்களிடம் பணம் கட்டியவர்கள் தீபாவளி பண்டிகை வரை காத்திருந்தும் பொருட்கள் கிடைக்காததால் அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்களது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அங்கு காவலர்கள் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சென்று புகார் அளிக்குமாறு கூறினார்கள்.