சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படித்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் வகையில் "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டம்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் விண்ணப்ப பதிவு இன்று (ஜூன் 25) முதல் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவிகள் கல்லூரிகளில் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலமாக, வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.