சென்னை:நகைக்கடன் தள்ளுபடி விவகாரம் தொடர்பாக (மார்ச் 21) சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.
நகைக்கடன் தள்ளுபடி குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "5 சவரனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வைத்தவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாறு அரசு எந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை" எனக் குற்றஞ்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் ரூ.1,000 கோடி விடுவிப்பு:இதனிடையே சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 24) நிதிநிலை அறிக்கை மீதான பதிலுரையில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, சட்டபேரவையில் 2022-2023ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை பற்றி பேசினார்.
அதில், பொது கடன் தள்ளுபடிக்கான தொகை ஒரே நாளில் ரூ.1,000 கோடி விடுவிப்பு செய்து மக்களுக்கு சேவை செய்திருப்பதாகவும், மேலும் கடந்த மூன்று நாளில் 5லட்சத்து 48ஆயிரம் பொது மக்களுக்கு கடன் தள்ளுபடி செய்ததற்கான ரசீதுகள் வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ளவர்களுக்கு 31ஆம் தேதிக்குள் ரசீதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 28ஆம் தேதியே அனைவருக்கும் ரசீதுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை.. நீர்மட்டத்தை 140 அடியாக குறைக்க கேரளா திட்டம்!