சென்னை: கோவை மாவட்டம், வடக்கிப்பாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய நாட்ராயன், கடந்த ஏப்.19ஆம் தேதி மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார்.
மதுரை சித்திரை திருவிழாவில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூ.10 நிதி - மதுரை சித்திரை திருவிழா பாதுகாப்பு பணியின்போது உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் நாட்ராயன் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி
மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்புப் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் நாட்ராயன் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு
அன்றிரவு 10.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த செய்தியை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் நாட்ராயனின் குடும்பத்தாருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். அதோடு, உடனடியாக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து, பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 10 கோயில்களில் இலவசப் பிரசாதம்- அமைச்சர் சேகர்பாபு