தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பட்ஜெட் 2022: வானிலையைத் துல்லியமாகக் கணிக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு - பட்ஜெட்டில் வானிலை மையம்

தமிழ்நாட்டில் வானிலையைத் துல்லியமாகக் கணிக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

rs-10-crore-for-accurate-forecasting-of-weather-in-tamilnadu
rs-10-crore-for-accurate-forecasting-of-weather-in-tamilnadu

By

Published : Mar 18, 2022, 11:32 AM IST

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுவருகிறது. அப்போது நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், வானிலையைத் துல்லியமாகக் கணிக்க, “பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை” மேம்படுத்துவதன் அவசியத்தை, அண்மையில் சென்னையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நமக்கு உணர்த்தியுள்ளது.

பேரிடர் தாக்கும் முன், உரிய நேரத்தில் எச்சரிக்கையை வழங்குவதற்கு, வானிலை பலூன் அமைப்பு, இரண்டு வானிலை ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள், 11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள், அதிவேகக் கணினிகள் (super computers) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஓர் கட்டமைப்பை அரசு உருவாக்கும். இப்பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கடும் அமளிக்கு இடையே பட்ஜெட் தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details