தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

50 ரூபாய் நோட்டை கீழேப் போட்டு, ரூ.1 லட்சம் திருடிய நூதனம் - ரூ.1 லட்சம் பணத்தைத் திருடிச் சென்ற சிசிடிவி காணோளியின் அடிப்படையில் போலீசார் விசாரணை

திருநின்றவூரில் ரூ. 50 நோட்டுகளை சாலையில் போட்டு ரூ.1 லட்சம் பணத்தைத் திருடிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிசிடிவி
சிசிடிவி

By

Published : May 7, 2022, 5:47 PM IST

சென்னை:ஆவடியை அடுத்த திருநின்றவூர் அம்பிகை புரம் பகுதியைச் சேர்ந்தவர் பில்டிங் காண்ட்ராக்டர் தியாகராஜன்(46). இவர் நேற்று (மே 6) அடகு வைத்த நகையை மீட்பதற்காக அதே பகுதியில் உள்ள வங்கியிலிருந்து ஒரு லட்சம் பணத்தை எடுத்தார்.

இதையடுத்து பணத்துடன் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், சாலையில் 50 ரூபாய் நோட்டுக்கள் கிடப்பதாக தியாகராஜனிடம் தெரிவித்தனர். இதைக் கேட்ட தியாகராஜன், வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு விரைந்து சென்று சாலையில் கிடந்த 50 ரூபாய் நோட்டுகளை எடுக்க ஆரம்பித்தார்.

4 பேருக்கு வலைவீச்சு

அந்த நேரத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரில் ஒருவர் தியாகராஜன் வாகனத்தில் இருந்த ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டார். இதுதெரியாமலேயே தியாகராஜன் வீட்டிற்கு சென்றார். அங்கு பணத்தை தேடி போது கிடைக்கவில்லை. இதையடுத்து திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்யும்போது, 50 ரூபாய் நோட்டுகளை வீசி, 4 பேர் பணத்தை திருடிய காட்சிகள் பதிவாகியிருந்தது. அதனப்படையில் நான்கு பேரையும் போலீசார் தேடிவருகின்றனர். இதேப் போன்று, பட்டாபிராமில் கடந்த மாதம் 9 சவரன் நகை வாகனத்தில் இருந்து திருடப்பட்டது.

இதையும் படிங்க:'அரசு புறம்போக்கு, நீர்நிலைகளில் வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா - மாவட்ட ஆட்சிய அலுவலகம் முற்றுகை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details