சென்னை அயனாவரத்தில் கஞ்சா வியாபாரியும் ரவுடியுமான சங்கர் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சென்னை புது ஆவடி சாலையில், ரவுடி சங்கரை காவல் துறையினர் கைது செய்ய முயற்சித்தனர். அப்போது காவலர் முபராக் என்பவரை, சங்கர் அரிவாளால் தாக்கியதால், உடனிருந்த காவல் ஆய்வாளர் நட்ராஜ் துப்பாக்கியால் சுட்டார். அதில் சங்கர் உயிரிழந்தார்.
அதையடுத்து சங்கரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காவலர் முபாரக் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரவுடி சங்கர் மீது 4 கொலை வழக்குள், 4 கொலை முயற்சி வழக்குகள், 29 அடிதடி வழக்குகள் மற்றும் ஆள்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.