தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தூத்துக்குடி என்கவுன்ட்டர்: அறிக்கை அளிக்க தமிழ்நாடு உள் துறைச் செயலருக்கு உத்தரவு - thoothukudi siRowdy encountertarist

தூத்துக்குடியில் ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்க தமிழ்நாடு உள் துறைச் செயலருக்குத் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி என்கவூண்டர்
தூத்துக்குடி என்கவூண்டர்

By

Published : Oct 19, 2021, 6:29 AM IST

தூத்துக்குடி அருகேவுள்ள கூட்டாம்புளி திருமலையாபுரத்தைச் சேர்ந்தவர் துரைமுருகன், இவர் மீது ஏழு கொலை வழக்குகள் உள்பட 35-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் நடந்த கொலை தொடர்பாக உதவு ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை காவல் துறையின்ர், அவரைத் தேடிவந்தனர்.

இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி பிற்பகலில் முத்தையாபுரம் கோவளம் கடற்கரைப் பகுதியில் பதுங்கியிருந்த துரைமுருகனை காவல் துறையினர் சுற்றிவளைத்தனர். அப்போது துரைமுருகன் காவலர்களை அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றதால் காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் கழுத்து, தலை உள்பட உடலில் மூன்று இடங்களில் குண்டுபாய்ந்து துரைமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த என்கவுன்ட்டர் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த மனித உரிமைகள் அமைப்புகள், இது சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.

இந்தச் செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி பாஸ்கரன், இது சம்பந்தமாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கைத் தாக்கல்செய்ய தமிழ்நாடு உள் துறைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details