சென்னையில் உள்ள ஆவடியை அடுத்த பூம்பொழில் நகரை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகன் புஜ்ஜி என்கின்ற ரமேஷ். ரமேஷுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. மதுபோதைக்கு அடிமையான ரமேஷ் மீது அடிதடி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் புஜ்ஜி ரமேஷ் தன் வீட்டின் அருகில் உள்ள கறிக்கடையில் சடலமாக கிடந்துள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அருகிலுள்ள டேங்க் பேக்டரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் புஜ்ஜி ரமேஷ் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.