விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வலசை என்னும் பகுதியில் பிரபல ரவுடி சின்ன சிவக்குமார் தனது கூட்டாளி ராஜ்குமாருடன் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற காவல் துறையினர், இருவரையும் கைது செய்து மயிலாப்பூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அவர்களிடமிருந்த எட்டு பட்டாக்கத்தி, ஒரு துப்பாக்கி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் சமூக விரோத செயலில் ஈடுபடும் நோக்கில் திட்டம் தீட்டி அங்கு பதுங்கியிருந்தது தெரிய வந்தது.