சென்னையைச் சேர்ந்த பினு என்பவர் பிரபல ரவுடி ஆவார். இவரின் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 36 வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு மாங்காடு அருகே பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது 50-க்கும் மேற்பட்ட ரவுடிகளை சுற்றி வளைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.
அப்போது தப்பிச் சென்ற பினு, பின்னர் காவல் துறையினர் முன்னிலையில் சரணடைந்தார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மாங்காடு காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனையில் பிணை வழங்கியது.
ஆனால் மாங்காடு காவல் நிலையத்தில் தொடர்ந்து கையெழுத்திடாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்த பினு, நேற்று திருவல்லிக்கேணி காந்திநகர் பகுதியில் உள்ள தனது சகோதரி அர்பலட்சுமி வீட்டில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக திருவல்லிக்கேணி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.