சென்னை மலையம்பாக்கத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி ரவுடி பினு சக ரவுடிகளை ஒன்று திரட்டி சினிமா பாணியில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை தெரிந்துகொண்ட காவல் துறையினர் அதிரடியாக சென்று ஏராளமான ரவுடிகளை கைது செய்தனர். ஆனால் பினு தப்பி ஓடிவிட்டார். அதனையடுத்து அவர் காவல் துறையிடம் சரண் அடைந்தார்.
ரவுடிகளுடன் கெட் டூ கெதர் நடத்திய பினு கைது - ரவுடி பினு
சென்னை: ரவுடிகளை ஒன்று திரட்டி தனது பிறந்தநாளை கொண்டாடி தலைமறைவாக இருந்த ரவுடி பினுவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அதன்பிறகு வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட பினு, காலை மாலை என இரண்டு வேளையும் மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை பிணையுடன் வெளியில் வந்தார். ஆனால் பிணையில் வெளிவந்த மறுநாளே அவர் தலைமறைவானார். இதனால் பினுவை காவல் துறையினர் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில், சென்னை எழும்பூரில் நள்ளிரவு ஒரு சொகுசு கார் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்காமல் இருக்க தெருக்களுக்குள் புகுந்து சென்றுள்ளது. இதனை தேர்தல் அலுவலர்கள் கவனித்ததை அடுத்து அந்தக் காரை காவல் துறையினர் பின் தொடர்ந்துச் சென்று மடக்கிப்பிடித்தனர். அப்போது காருக்குள் பினு இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.