சென்னை அண்ணாசாலை, பார்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (24). இவர் மீது அண்ணாசலை, திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் ரவுடி பாஸ்கர் நேற்றுமுன்தினம் இரவு (பிப்.28) தனது கூட்டாளி மனோஜ் உடன் சென்னை மெரினாசாலை கண்ணகி சிலை அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, இருசக்கர வாகனம் ஒன்று ரவுடி பாஸ்கர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
சரித்திரப் பதிவேடு குற்றவாளி சந்தேக மரணம்! - Chennai Rowdy murder case
சென்னை: ரவுடி பாஸ்கர் சாலையைக் கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதில், காயமடைந்த பாஸ்கரை அவரது கூட்டாளி மனோஜ், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு சென்ற போக்குவரத்துக் காவல் துறையினர் ரவுடி பாஸ்கர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் 'முன்விரோதம் காரணமாக தனது மகனை திட்டமிட்டு யாரோ கொலை செய்துள்ளதாக' இறந்த பாஸ்கரின் தாயார் மெரினா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.